2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

10 வயது மாணவன் படுகொலை: சந்தேகநபருக்கு காயம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய பனாகொட, கபுகொட வீதியிலுள்ள வீட்டில், 10 வயது மாணவன் வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும், சந்தேகநபருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனை வெட்டியதாக கூறப்படும் அரிவாளை மறைத்துவைத்திருக்கின்ற இடத்தை காண்பிப்பதற்கு கல்கூரிக்கு அழைத்துசென்றபோதே அவர், கற்பாறைகளுக்கு இடையில் சறுகி விழுந்துவிட்டதாகும் அவரது காலிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

10 வயது சிறுவனை வெட்டிக்கொலைச் செய்ததாக கூறப்படும் சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள கல்கூரியில் வேலைச்செய்த தொழிலாளர் ஒருவரை பியகமவில் வைத்து பொலிஸார், நேற்று சனிக்கிழமை கைதுசெய்தனர்.

பனாகொடை பராகிராம வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் பயின்றவர் 10 வயதான மாணவனே, கொலைச்செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (25) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X