2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'வாகன இறக்குமதியின் போது ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான ஊழல்'

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன அனுமதிப்பத்திரங்களைக் (பேர்மிட்) கொண்டு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது, சுங்கத்திணைக்களத்தில் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான ஊழல் இடம்பெற்றுள்ளதாக, அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கம், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.

வாகனங்களை தீர்வை மற்றும் தீர்வை நீக்கப்பட்ட நிலையில் துறைமுகங்களில் இருந்து விடுவிக்கும் போது இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறித்த சங்கம் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

பல நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்த போது இந்த நிதிமோசடிகள் இடம்பெற்றுள்ளன.

அரச பணியாளர்கள், தமக்கான தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை இறக்குமதியாளர்களிடம் விற்பனை செய்வதால், அவர்கள் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X