Editorial / 2026 ஜனவரி 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

10 கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், காலி - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் கிளி ஒன்றை காலி எல்பிட்டிய பிரதேசத்தில் விற்பனை செய்ய முயன்ற போதே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் மற்றையவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளையும் வனப்பகுதியில் விடுவிக்குமாறு நீதவான், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
6 hours ago