2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘14 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதில்லை’

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது. 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது, ஜனாதிபதியின் அக்கிராசன உரை மாத்திரமே இடம்பெறும்" எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையோ, அல்லது பெரும்பான்மை நிரூபிப்பு போன்ற எந்தவொரு நிகழ்வுகளும் 14 ஆம் திகதிக்கான நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும், அதனால், ஜனாதிபதியின் உரை முடிந்ததும் மீண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமைத் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுக் குறித்து, தேவை ஏற்படின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .