2026 ஜனவரி 03, சனிக்கிழமை

14 வயது மகன் படுகொலை: தந்தை கைது

Editorial   / 2026 ஜனவரி 03 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூரி, நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.  உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வீடொன்றுக்கு அருகில் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டச சிறுவனை நூரி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X