Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
S.Renuka / 2025 மே 18 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இல்லாததும், தொடர்ந்து மழை பெய்வதும் தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை பங்களிக்கிறது.
மேலும், நல்ல சூரிய ஒளி உள்ள காலங்களில் 100,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான அறுவடை செய்துள்ளது என்று தனியார் மற்றும் அரசு உப்பு உற்பத்தியாளர்களின் தொடர்புடைய துறைகள் தெரிவிக்கின்றன.
உப்பு உற்பத்தியைத் தடுத்து வந்த மழைக்கால நிலைமைகள் உப்பு விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்தின.
இந்நிலையில், புத்தளத்தில், சிறுபோகப் பருவத்தில் அதிக அறுவடைக்கு வழிவகுத்த நிலையில், சனிக்கிழமை (17) அன்று தொடங்கிய எதிர்பாராத மழையால், புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago