J.A. George / 2021 ஜூலை 16 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு குறித்த தடுப்பூசிகள் இன்று (16) காலை கொண்டுவரப்பட்டுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் தடுப்பூசி பகிர்வுப் பொறிமுறையின் கீழ் இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன
அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தின் மூலமாக இவை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றில் 7 இலட்சத்து 50 ஆயிரம் மொடர்னா தடுப்பூசிகள் முதல் டோசாக பொதுமக்களுக்கு வழங்கப்படு என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாதத்தின் பின்னர் எஞ்சிய 7 இலட்சத்து 50 ஆயிரம் மொடர்னா தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025