Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 25 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும், 18ஆவது திருத்தச் சட்டத்தில், எவ்விதக் குறைகளும் இல்லையென்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கல்கிஸையில் அமைந்துள்ள தர்மபாலாராமய விகாரைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு, அமரபுர நிக்காயவின் மஹா நாயக்கத் தேரர் அக்ரபமஹா பண்டித்த கொட்டுகொட தம்மவாச தேரரை, நேற்று (24) சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி - ஹங்குரான்கெத்தையில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், 18ஆவது திருத்தத்தில் என்ன தீங்கிருக்கின்றதெனத் தனக்குத் தெளிவில்லை என்றும் எவ்வாறாயினும், 19ஆவது திருத்தத்திலிருக்கும் தீங்குகளை ஜனாதிபதி புரிந்துகொண்டமை குறித்து தான் மகிழ்ச்சியமைவதாகவும் கூறியிருந்தார்.
இருப்பினும், தற்போது காலம் கடந்துவிட்டது என்றும் இன்னும் நான்கைந்து மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவற்றைப் பரிட்சித்துபார்க்கும் காலம் இனியில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
25 minute ago