2021 மே 08, சனிக்கிழமை

போதைப்பொருட்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பதற்காக விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில்  போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலிருந்தும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் என அவர் கூறினார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நாம் தேடிச்சென்று கைது செய்வோம். போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் கருத்திற்கொள்ளப்படுவர். ஆனால் போதைப் பொருட்களை விநியோகிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் குறையும் என பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X