Kogilavani / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கத் தூண்டும் விதமாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு 1000ரூபா பணமும் மதிய உணவுப்பொதியும் வழங்கியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இன்று கூறியது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலேயே அதிகமான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி கூறினார்.
சில வேட்பாளர்கள் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேல் தேர்தல் பிரசாரத்துக்கு செலவளிப்பதாகவும் இவர்கள் வெற்றிபெற்றால் இவர்களுக்கான மாத சம்பளம் 5000ரூபா அளவிலேயே இருக்கும் என அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் கைக்கொள்ள வேண்டிய நெறிகள் பற்றி தேர்தல் ஆணையாளர் பல தடவைகள் கடிதங்களை அனுப்பிய போதும் பயனேதும் ஏற்படவில்லையென அவர் கூறினார்.
'இதுவரை 60 தேர்தல் வன்முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொலன்னாவ நகரசபை பகுதியில் ஆகவும் கூடுதலான தேர்தல் வன்முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொட்டிகாவத்தை பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் முறைகேடான தேர்தல் பிரசாரங்களை தடுக்க முடியுமாயின், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதை இலகுவாக தடுக்க முடியும். அரசியல்வாதிகள் இந்த நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேணடாம்'' என ஹெட்டியாராய்ச்சி கூறினார்.
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025