2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சபையிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் சற்றுமுன் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினரான ஐ.தே.க. எம்.பி ஜோன் அமரதுங்க, நாடாளுமன்றத்தில் உரையாற்ற முற்பட்ட வேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவரை உரையாற்ற விடாது கூச்சலிட்டுள்ளனர்.
 
இதன்போது உரையாற்றிக்கொண்டிருந்த ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத், தனது உரையை நிறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரைகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் தொந்தரவு விளைவித்ததை அடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .