2025 மே 16, வெள்ளிக்கிழமை

சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் அறிவித்தது.

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றபோது, அவருக்கு பிணை வழங்குமாறு வலியுறுத்தி மனுவொன்றும தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், அந்த பிணை கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பிரியந்த லியனகே, சஜின் எம்.பி.யின் விளக்கமறியலை நீடிக்க உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 22 வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சஜின் வாஸ் எம்.பி.க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .