2025 மே 16, வெள்ளிக்கிழமை

திஸ்ஸவிடம் இன்றும் விசாரணை

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவிடம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இன்று புதன்கிழமை (17) மீண்டும் விசாரணை நடத்துகிறது.

இந்த விசாரணையில் கலந்துகொள்வதற்காக திஸ்ஸ எம்.பி, இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு சமூகமளித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட திஸ்ஸ எம்.பி, சுகாதார அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலேயே மேற்படி விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .