2025 மே 16, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு போதை பானம் விற்றவர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கு போதையூட்டக்கூடிய பானம் விற்றார் என்ற குற்றச்சாட்டில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டி நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் கடுகண்ணாவை பொலிஸ் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வர்த்தக நிலையத்தில் இருந்து போதையூட்டக்கூடிய பானம் அடங்கிய 60 போத்தல்களை மீட்டுள்ளதாகவும் கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஜூலை 2ஆம் திகதி ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .