2025 மே 16, வெள்ளிக்கிழமை

கோல்டன் கீ சேமிப்பாளர்களுக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோல்டன் கீ சேமிப்பாளர்கள் இழந்த தொகையின் 41 சதவீதத்தை மீளப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என சட்ட மா அதிபர், சற்றுமுன்னர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, கோல்டன் கீ முதலீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்டு பணத்தை இழந்த சேமிப்பாளர்களுக்கு, அவர்களின் வைப்புத் தொகையிலிருந்து 41 சதவீத பணம் மீளக் கிடைக்கவுள்ளது.

கோல்டன் கீ விவகாரம் தொடர்பான வழக்கு, ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழுவின் முன்னிவையில் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்ட மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .