2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி, அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள வயல்வெளியில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தின்போது  காயமடைந்த ஏழு பெண்களும் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட  மூன்று பேர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பஸ் வண்டிச் சாரதி அக்குரஸ்ஸ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .