2025 மே 15, வியாழக்கிழமை

ஓரினச்சேர்க்கையால் 'எயிட்ஸ்' அதிகரிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 26 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார்.

இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. அத்துடன், அதிக வயதுடைய பெண்கள், இளைஞர்களை ஆட்கொண்டு பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் இந்நிலைமை அதிகரிப்பதற்கு காரணமாகின்றது' என்றார்.  

தன்னுடைய கணவன் அல்லது மனைவியைத் தவிர்ந்த ஏனையோருடன் பாலியல் தொடர்புகளைப் பேணுவதாலும் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவுவதாக அவர் இதன்போது மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .