2025 மே 15, வியாழக்கிழமை

இராமேஸ்வரம் - தலைமன்னார் ரயில் இணைப்பு குறித்து பேச்சு

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர படகு சேவைகள் 1966ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது.

தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான கடற்பரப்பில் இலங்கையின் எல்லை தூரம் சுமார் 23 கிலோமீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .