2025 மே 15, வியாழக்கிழமை

மஹிந்தவின் அறக்கட்டளை புத்தகம்: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Kanagaraj   / 2015 ஜூலை 06 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு பெற்ற இராணுவ  வீரர்களை கொண்டுள்ள ரக்னா லங்கா நிறுவனம் பேணுகின்ற இலங்கை வங்கியின் டொரின்டன் கிளை வங்கி கணக்கை சோதனைக்கு உட்படுத்துவதற்கு இரகசிய பொலிஸாருக்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அந்த வங்கியின் முகாமையாளருக்கு கட்டளையிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாக காலத்தில் அறக்கட்டளை புத்தகம்( பிங் புத்தகம்) அச்சடிப்பதற்காக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து 25 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே பிரதான நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .