2025 மே 15, வியாழக்கிழமை

முன்னாள் போராளி கைது

Kanagaraj   / 2015 ஜூலை 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த முன்னாள் போராளியை திங்கட்கிழமை (06) இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .