2025 மே 15, வியாழக்கிழமை

'நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி' ஒப்பந்தம் ஞாயிறு கைச்சாத்து?

George   / 2015 ஜூலை 11 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியை உருவாக்குவது தொடர்பிலான ஒப்பந்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை(12) கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கூட்டணிகளை ஒன்றினைத்து “யானை” சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலான ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம், அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

முன்னதாக, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்கள் 'நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி' என்ற புதிய கூட்டணியில் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சனிக்கிழமை(11) அனுமதி அளித்திருந்தது.

பொரளை கொம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வைத்து இந்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .