2025 மே 15, வியாழக்கிழமை

நல்லாட்சிக்கான புரட்சியை உடைக்க எதிர்புரட்சி

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

'ஜனவரி 8ஆம் திகதி, இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட புரட்சியை உடைப்பதற்கும் மீண்டும் பலத்தை பெறுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ அரசில் இருந்த சிலர் முயற்சிப்பதுடன் எதிர்புரட்சி செய்ய முயற்சிக்கின்றனர். நல்லாட்சிக்காண பயணத்தில் அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நல்லாட்சியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி'க்கான ஒப்பந்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச்சென்றவர்கள், ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இணைந்தே இந்த 'நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி' எனும் கூட்டணியில் யானை சின்னத்தின் போட்டியிடவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, ஜாதிக்க ஹெல உறுமயவின் செயலாளர் அமைச்சர்; பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், ஐக்கிய தேசியக் கட்சியன் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம், அமைச்சர்களான  எம்.கே.டி.எஸ்.குணவர்தன மற்றும் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் கையொப்பமிட்டனர்.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.  இது இந்த பொதுத் தேர்தலுக்குhக மாத்திரமே. பொதுத்தேர்தலுக்கு பின்னர் அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்யமுடியும்' என்று பிரதமர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .