2025 மே 15, வியாழக்கிழமை

ஏமாற்றிவிட்டனர்: முரளிதரன்

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  தேசியப்பட்டியலில் தனக்கு இடமளிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக  முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜயந்தவும், அநுர பிரியதர்ஷன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்' என்றார். 

'போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என என்னிடம் உதவி கோரினர்.

நாட்டுக்காக அந்த நேரத்தில் நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது' என்று முரளிதரன் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .