2025 மே 15, வியாழக்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதங்கள்  குறைக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை நேற்று புதன்கிழமை(15) முற்பகல் விடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை குறைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நேற்று முன்தினம்இம்பெற்ற கலந்துரையாடலின்போது, தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .