2025 மே 15, வியாழக்கிழமை

எமிரேட்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது

Thipaan   / 2015 ஜூலை 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து சிட்னிக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணியொருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதையடுத்தே விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுபாயிலிருந்து சிட்னிக்கு பயணித்த ஈகே412 என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது. அவ்விமானத்தில் 478 பயணிகளும் 35 விமான சிப்பந்திகளும் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பயணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், சற்று தாமதமாக விமானம் பயணித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .