Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 18 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளொன்றில் 18 தொடக்கம் 20 கிலோகிராம்; வரையான தேயிலைக் கொழுந்துகளை பறிக்கும் தொழிலாளர்களுக்கு இருநாட் சம்பளம் வழங்குவதற்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சில தவறான அறிக்கைகள் தொடர்பில் தமது கடுமையான அதிருப்தியையும், விசனத்தையும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அவர்களின் பங்குபற்றலுடன் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது, எவ்விதமான கோரிக்கைகளுக்கும் சம்மேளனம் உடன்படவில்லை.
எனவே, பெருந்தோட்டக்கம்பனிகள் மூலமாக தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றில் 1,000 ரூபாய் வருமானமாக பெறுவது பற்றி முன்வைக்கப்பட்ட பரிந்துரைப்புகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எய்தப்படும் வரையில், தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி சம்பள முறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது, தற்போது மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ள தொழிலாளர்களின் கவனத்தை தவறாக திசை திருப்பும் வகையில், சில அமைப்புகளின் மூலமாக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி விழிப்புடன் செயலாற்றுமாறு அனைத்து துறைசார்ந்த பங்காளர்கள் மற்றும் பொது மக்களையும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரியுள்ளது.
இந்த முறை செயற்படுத்தப்பட்டால், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கையான நாளொன்றுக்கு 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதன் மூலமாக, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வருடமொன்றில் 18,000 மில்லியன் ரூபாய் எனும் பாரிய இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, தற்போது உற்பத்தி செய்து ஏல விற்பனையின் போது கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபாயை இழந்துவரும் கம்பனிகளுக்கு இந்த தாங்கிக்க கொள்ள முடியாத விடயமாக இருக்கும். தற்போது ஏல விற்பனையின் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலையை 287 ரூபாயால் அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே இந்த அதிகரிப்பு வழங்குவது பற்றி கம்பனிகள் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago