2025 மே 15, வியாழக்கிழமை

மேர்வினின் ஆதரவு ஐ.தே.க.வுக்கு

Gavitha   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மேர்வின் சில்வா, 'ராஜபக்ஷ குடும்பத்தாரை அரசியலிலிருந்து நீக்க வேண்டுமாயின், ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு பலப்பட வேண்டும். தான் ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்த போதிலும், தான் ஓர் உண்மையான இலங்கையன்' என்றும் சுட்டிக்காட்டினார்.

தன்னுடைய இந்த தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான அர்ஜ§ன ரணதுங்கவிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட மேர்வின், எதிர்வரும் நாட்களில் ஐ.தே.க.வின் தேர்தல் மேடைகளில் தானும் தோன்றப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

தன்னுடைய இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இழுத்துவிட்டதாகக் கூறிய மேர்வின், தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .