2025 மே 15, வியாழக்கிழமை

பிச்சை எடுத்த சீனர்கள் அறுவருக்கும் அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 23 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மல் சூரியகொட 

பொது மக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு செய்யும் வகையில் கொழும்பு புகையிரத நிலையத்துக்கு அருகில் பிச்சை எடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சீன பிச்சைக்காரர்கள் அறுவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான், தலா 100 ரூபாய் அபராதம் விதித்தார். 

இவர்கள், பிச்சை எடுப்பது பற்றி கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில், நேற்று புதன்கிழமை (22) ஆஜர்படுத்தினர்.  

குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்து நீதவான் பிரியந்த லியனகே ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

கொள்ளுப்பிட்டியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அதில் தங்கியிருந்து பிச்சை எடுக்க நான்கு சீனர்களை பயன்படுத்திய சூத்திரதார்களாக 5ஆவது 6ஆவது சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .