2025 மே 15, வியாழக்கிழமை

ஐவருக்கு மரண தண்டணை

Gavitha   / 2015 ஜூலை 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
 
தலவாக்கலை, லிந்துலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தில், கடந்த 2000ஆம் ஆண்டு ஒருவரை தடியால் அடித்து கொலை செய்தார்கள் என்று குற்றச்சாட்டப்பட்ட ஐவரை குற்றவாளிகளாக இனங்கண்ட நுவரெலியா உயர் நீதிமன்றம் நீதிபதி லலித் ஏக்கநாயக்க அந்த ஐவருக்கும் மரணத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். 

இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, 3 பேர் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (24) ஆஜராகியிருந்த கிறேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் வேலுப்பிள்ளை, பெருமாள் லெட்சுமன், பெருமாள் மயில்வாகனம், பெருமாள் பாகர், ராஜேந்திரன் குணசேகரன் ஆகிய ஜந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபர்கள் லிந்துலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள சுப்பையா மாரிமுத்து என்பவரை, தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .