Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 23 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோசப் அன்டன் ஜோர்ஜ்
மிரிஹான பொலிஸாரால் திங்கட்கிழமை இரவு ஆயுதத்துடன் கைப்பற்றப்பட்ட வாகனம், இராணுவத்துக்கு சொந்தமானது எனவும் அது விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணைகளின்றி கூற முடியாது எனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மிரிஹான பொலிஸாரால் கைத்துப்பாக்கியுடன் கைப்பற்றப்பட்ட மேற்படிவாகனம், இராணுவத்துக்கு சொந்தமானது. அதில் இராணுவ இலக்கத் தகட்டுக்கு பதிலாக சாதாரண இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் மிரிஹான பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, மிரிஹான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது யூ.ஹ.59466 என்ற இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட இராணுவ வாகனமாகும். குறித்த வாகனத்திலிருந்து கைது செய்யப்பட்ட இராணுவீரர்கள் மூவரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புபிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கைதுசெய்யப்படும் போது சிவில் உடையில் இருந்துள்ளனர்.
மேலும்,அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி,மேஜர் ஜெனரல் பிரசன்னசில்வாவின் பாதுகாப்புக்காக 15 வருடங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டதாகும். பாதுகாப்பு அமைச்சுக்கு செல்லும்போது மாத்திரம் அதைகொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஏனைய நேரங்களில் பாதுகாப்புக்காக அதை பயன்படுத்தமுடியும்.
இதுவரை முன்னெடுக்கப்பட்டவிசாரணைகளின் பிரகாரம் குறித்த இராணுவவாகனமோ கைத்துப்பாக்கி மற்றும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மூவரும் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேஜர் ஜெனரல் பிரசன்னசில்வா 1982ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார். சுமார் 30 வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் அவர் யுத்தத்தின்போது 55ஆவது படைபிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டவராவார்.
தாய்நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர் மீது இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவானதில்லை.
இந்தசம்பவத்துடன் எந்தவித அரசியல் செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லை, சிலர் கூறுவது போல யாரையும் கொலை செய்யவோ அல்லது சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கிலோ குறித்த வாகனம் பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.
குறித்த இராணுவாகனம் இறுதியுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வாகனம் என கூறப்படுகிறதே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியை குறுக்கிட்ட இராணுவபேச்சாளர், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாமல் எதனையும் உறுதியாக கூறமுடியாது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இது இராணுவ வாகனமே என்றார்.
இதேவேளை, மிரிஹான பொலிஸாரால் கைதான இராணுவ வீரர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் செவ்வாய்கிழமை(21) ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் இவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago