2025 மே 15, வியாழக்கிழமை

'உக்குவா' சுட்டுக்கொலை

Kanagaraj   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 'உக்குவா' என்றழைக்கப்படும் நபர் ஒருவர், இனந்தெரியாதோரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள உக்குவா உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும் வாரத்துக்கு ஒருதடவை தங்கல்ல பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்து கையொப்பம் இடவேண்டும்.

அவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்து கையொப்பம் இட்டுவிட்டு மீண்டும் திரும்பி சென்றுகொண்டிருந்த போதே தங்கல்ல நகரத்துக்கு அண்மையில் வைத்து இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியவர்களே முச்சக்கரவண்டியின் பின்பக்கத்துக்கு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

உக்குவா அந்த இடத்திலேயே பலியானதுடன் ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மூவரும் மனித படுகொலை வழக்கின் பிரதிவாதிகள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .