2025 மே 16, வெள்ளிக்கிழமை

தங்கத்தை கட்டுத்துணிக்குள் மறைத்து வைத்தோர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கக்கட்டிகளை கடத்துவதற்கு முற்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகளை, கேரளாவிலுள்ள நெடும்பசரி விமானநிலையத்தில் வைத்து சுங்கத்துறை விமானநிலைய புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கொழும்பிலிருந்து குறித்த விமானநிலையத்துக்கு சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
விசாரணைகளின் போது, இவர்கள் நான்கு தங்கக்கட்டிகளை, கால்களில் சுற்றப்பட்டிருந்த கட்டுத்துணிகளுக்குள் மறைத்து வைத்திருந்தமையும் ஒவ்வொரு தங்கக்கட்டியும் 200 கிராம் நிறை கொண்டவை என்றும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தங்கக்கட்டிகளை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வற்காகவே கடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .