2025 மே 16, வெள்ளிக்கிழமை

பொரலஸ்கமுவவையில் போக்குவரத்து கட்டுப்பாடு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹரா, நாளை வியாழன் (13) இரவு 8.30 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை நடைபெறவுள்ளமையால் அதனை சுற்றி அமைந்துள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மஹரகம, தெஹிவளைக்கான 119ஆம் இலக்க  பஸ், பொரலஸ்கமுவ மற்றும் பெல்லந்தர சந்திவரையான மார்க்க பாதைக்கான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மஹரகம, பிலியந்தலை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து தெஹிவளை நோக்கி பயணிப்பவர்கள் பெபிலியான சந்தியில் இருந்து இடது  பக்கமாக திரும்பி கீல்ஸ் சந்தியால் நெதிமால ஊடாக தெஹிவளைக்கு செல்ல முடியும் எனவும்

ரத்மலானையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணிப்பவர்கள் கீல்ஸ் சந்திக்கு குறுக்கால் பெபிலியான நோக்கி பயணித்து கொழும்பு மற்றும் பொரலஸ்கமுவ நோக்கிப் பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ மற்றும காலி பிரதான வீதியால் வந்து வேரஹெர சந்தியால் கங்காராம  பாதையால் ஓழுமடம சந்திக்கு வரும் வீதியை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .