2025 மே 16, வெள்ளிக்கிழமை

மூங்கில் வென்றது: பட்டாக்கத்தி தோற்றது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூங்கிலுக்கும் பட்டாக்கத்திக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் மூங்கில் வெற்றிபெற்ற சம்பவமொன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனுராதபுரம் அரிப்பு வீதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கஞ்சா சுற்றிவளைப்புக்கு சிவில் உடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்; சென்றுள்ளார்.

கான்ஸ்டபிளை கண்ட கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படும் அந்தபெண் தான் மறைத்துவைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு கான்ஸ்டபிளை துரத்தியுள்ளார்.

நிலைமையை விளங்கி தன்னை சுதாகரித்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அருகிலிருந்த மூங்கிலை எடுத்து பட்டாக்கத்தியை ஏந்தியிருந்த பெண்ணுடன் சண்டையிட்டுள்ளார்.

ஈற்றில், அந்த பெண்ணை பட்டாக்கத்தியுடன் மடக்கிப்பிடித்த கான்ஸ்டபிள், அந்த பெண்ணிடமிருந்து கஞ்சாவை மீட்டதுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் பெண்ணை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்; என்று அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .