Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
அனைவரையும் உள்ளடக்கிய நாட்டுக்கான ஒரு தனிப்பட்ட கொள்கையை அமைப்பதற்காகவும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்காவும் மாத்திரமே தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று நாம் கூறுகின்றோமே தவிர, வேறெந்த காரணத்துக்காகவும் இல்லை என்று கொள்ளை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு சிட்டி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்பதை 100 சதவீதம் உறுதியாக கூறுகின்றேன்' என்றார்.
'வாருங்கள் எதையாவது செய்வோம்' என்று, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் கூறவில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் மக்கள் நம்பக்கூடியவற்றையே உள்ளடக்கியுள்ளோம். அது மாத்திரமல்லாது இவையனைத்தையும் செயற்படுத்துவதற்கான அடித்தளத்தையும் நாம் இட்டுள்ளோம்.
வறுமை, விதவைகள் பிரச்சினை, தொழிலின்மை, கஞ்சா பாவனை, சிறுவயது திருமணங்கள், திறன் பயிற்சிகளுக்கான தேவைகள் காணப்படாமை இவையனைத்துமே வடக்கு - கிழக்கில் காணப்படும் உண்மையான பிரச்சினைகளாக காணப்படுகின்றது. விவசாய நிலங்கள் இன்மையும் அதற்கான நீர் வசதிகள் மற்றும் வீடுகளுக்கான ஒழுங்கான கட்டமைப்புகள் இல்லாது இருப்பதும் வடக்கு கிழக்கில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் ஆகும். மீள்குடியேற்றம் என்பது, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'எமக்கு தேவையானது அனைத்தும் ஒரு புதியதொரு பொருளாதாரத்தை கட்டமைப்பை உருவாக்கி, ஆசியாவிலே ஏன் உலகத்திலேயே மிகவும் போட்டிகரமான நாடாக இலங்கையை மாற்றுவதுதான். பிரச்சினைகள் அனைத்தும் பொருளாதாரத்திலேயே அடங்கியுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால், நாடு மாத்திரமல்லாது, நாட்டு மக்களும் வளர்ச்சியடைவர். ஏங்களுக்கு தேவைப்படுவது எல்லாம் பொருளாதார ஜனநாயக முறைமையே.
ஒருவருக்கு தனியொரு வீடு சொந்தமாக இருந்தால் நாடு பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து விட்டது என்பதே அர்த்தம். இறந்த கலத்தை மறந்து நாம் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கு எங்களுடன் அனைவரும் இணையவேண்டும். சமூக சந்தை பொருளதாரம் ஒன்றை உருவாக்குவதே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பகுதியாக அமைந்துள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago