2025 மே 16, வெள்ளிக்கிழமை

'மிஹின்' முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹின் லங்கா முன்னாள் நிறைவேற்று அதிகாரியான அனுர மஹேந்திர பண்டார, நீர்கொழும்பு தொழில் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்ற வழக்குக்கு சென்றுகொண்டிருந்த போது அவருடைய ஆவணங்களை இனந்தெரியாதோர் சிலர் அபகரித்து சென்றுவிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கறுப்பு நிறத்திலான டிபென்டர் ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினரே நுகேகொடை சுஹந்திராராம சந்தியில் வைத்து அவரை அச்சுறுத்தி ஆவணங்களை அபகரித்து சென்றுவிட்டதாக அவர் செய்துள்ள முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்த கணினி, பென்டிரைவ், மேலங்கி உள்ளிட்ட 2,45,000 ரூபாய் ஆகியவற்றையும் அபகரித்துசென்றுவிட்டதாக அந்த முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .