Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி மோசடி விசாரணை பிரிவை FCID ஒழிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு ஆட்சேபனையை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித்த மலல்கொடவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதியரசர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
வண. எல்லே குணவன்ச மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோரினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மன்றில் இருந்த எல்லே குணவன்ச, மனுவைத்தாக்கல் செய்ததன் பின்னர் பொலிஸார் தனக்கு இடையூறு விளைவிப்பதாகவும் நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு சமுகமளிக்குமாறும் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு நீதியரசர், சட்டமா அதிபருக்கு பணித்தார். அத்துடன் இந்த வழக்கை ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு நீதியரசர் ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
2 hours ago
4 hours ago