Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாகண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜோன் அமரதுங்கவுடன் இணைந்து இராணுவத்தினரை பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துவதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
விமல் வீரவங்ச, தொடர்ந்து உரையாற்றுகையில்,
தோல்வியடைந்தது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, இந்த நாடும்தான்.
புலிகளில் 200 பேரை விடுதலை செய்துள்ளனர். 287 புலிகள் இன்னும் இருக்கின்றனர். அவர்கள், அடுத்த 17ஆம் திகதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
மனித படுகொலை செய்த பிரபாகரனை, அவர்கள் என்று விளிக்கும் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுத்த மஹிந்தவை கள்ளர் என்கின்றார். யுத்தத்தை முன்னெடுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் துப்பாக்கி ரவையில் செய்ததைதான் ஜனவரி 8ஆம் திகதி புள்ளடியில் செய்தனர் என்றால், இலங்கையின் ஐக்கியத்தை பாதுகாத்த, நாட்டை பாதுகாத்த தலைவருக்கு, சிங்க கொடிக்கும் சிங்கத்துக்கு பாதுகாப்பு கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவை கள்வர் என்கின்றனர்.
ஜனவரி 8ஆம் திகதி செய்ததை எதிர்வரும் 17ஆம் திகதி செய்யமுடியாது என்பதனை நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன் என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
5 hours ago
7 hours ago