2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரம்புக்கனையில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கனை எம்புல்அபேயில் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுபேர் காயமடைந்துள்ளனர் என்று ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்தில் நீண்ட நாட்களாக சூதாட்டம் இடம்பெறுவதாகவும் நேற்றிரவு அவ்விடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னரே கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த எண்மரில் மூவர் கேகாலை வைத்தியசாலையிலும் ஏனையோர் ரம்புக்கனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .