2025 மே 16, வெள்ளிக்கிழமை

வேட்பாளரின் சகோதரர்கள் இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டம், ரம்புக்கனை பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவரின் சகோதரர்கள் இருவரை, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் தும்பேமட கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகில் வைத்து, தேர்தலில் போட்டியிடும் தமது தமையனின் விருப்பு இலக்கம் பொறிக்கப்பட்ட சிறிய அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .