2025 மே 16, வெள்ளிக்கிழமை

தோல்வியை ஏற்றுக் கொண்டார் மஹிந்த

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.


இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

"பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது. நான் ஏற்றுக் கொள்கிறேன். சிறப்பான போட்டியொன்றில் நாம் தோல்வியடைந்துள்ளோம்" என அவர் தெரிவித்ததாக,  ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

ஐ.ம.சு.கூ ஆட்சியமைக்காத போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் கடமையாற்றுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எனினும், தற்போது டுவிட்டர் தளம் மூலம் கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி, வெற்றியையோ அல்லது தோல்வியையோ ஏற்றுக்கொள்வதற்கு, அவர் இன்னமும் உத்தியோகபூர்வ முடிவொன்றைப் பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .