2025 மே 17, சனிக்கிழமை

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரிக்கை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக் போட்டியிட்டு தோல்வியடைந்த ரோஸி சேனாநாயக்க, தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு, தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணவேண்டும் என்று தான் முன்வைத்த கோரிக்கைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, 65,320 விருப்பு வாக்குகளை பெற்று  தோல்வியடைந்தார்.

விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுவதன் மூலம் தனக்கு  அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்று தான் நம்புவதாகவும் எந்தவொரு பெறுபேறு கிடைத்தாலும் தான், நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் புதிய அரசாங்கத்தை கட்டியொழுப்புவதற்காகவும் அரசாங்கத்துக்கு  ஆதரவளிப்பதாவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .