2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவியை காணவில்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொடுவ தும்மல்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவியை சில தினங்களுக்கு முன்னர் இருந்து காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தும்மல்கொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 8இல் பயிலும் மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தன்னுடைய மகளை கடந்த 18ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவருடைய தாய், தங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம், காலையில் வேலைக்கு சென்ற தான் வேலையை முடித்துகொண்டு மாலை வீடுக்கு திரும்பி பார்த்தபோது மகளை காணவில்லை என்றும் குறித்த தினத்தன்று மாணவில் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் பிள்ளையை யாராவது பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X