2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் பட்ஜெட்டுக்கு முன்னர் நேரலை

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட்) முன்னர் நேரடி ஒளிபரப்பாகும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அதன் முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினங்களில் இரண்டு மணித்தியாலங்கள் அரச தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு 4 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த காலப்பகுதிக்குள் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X