Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலுக்கட்டாயமாக அல்லது தானாக அல்லது காணாமல் போதலுக்கான ஐக்கிய நாடுகள் செயற்குழு, நவம்பர் 9ஆம் திகதிமுதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என ஜெனீவாவவில் நடைபெறும் அதன் முப்பதாவது அமர்வில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவருக்கு நடந்தவை மற்றும் அவர்கள் எங்குள்ளனர் என்பதைத் தீர்மானிப்பதற்கு, உறவினர்களுக்கு உதவுவதற்கென ஐ.நா. மனித உரிமைகள் குழுவினால் 1980இல் இந்த செயற்குழு உருவாக்கப்பட்டது.
காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இது பாடுபடும்.
இதன் மூலம் ஒவ்வொரு சம்பவமும் உறுதி செய்யப்படுவதை இது உறுதிசெய்ய முயலும். சட்டத்துக்கு புறம்பாக காணாமல் போனோர் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்தும் நோக்கிலும் இது செயற்படும்.
வலுக்கட்டாயமாக காணாமற்செய்யபட்ட சகலரினதும் பாதுகாப்பு தெமாடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை அங்கத்துவ நாடுகள் நடைமுறைப்படுத்த இந்த செயற்குழு உதவிவழங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
3 hours ago