2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கிறோம் : சீமான்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகத் திருவிழா நடைபெறுகிறது. தென்னக கும்பமேளா என்றழைக்கப்படும் இந்த மகாமகத் திருவிழாவுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் எந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதோ, அந்த பணிகள் சரி வர நடைபெறவில்லை. அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்பது தெரியவில்லை. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் பணிகள் நடைபெறவில்லையெனில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் இலங்கையை தவிர்த்துவிட்டு தலையீடு அற்ற பன்னாட்டு விசாரணை தேவை. தமிழக சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம்' என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X