Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழ யுத்தத்தின் போது இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை தான் எதிர்கொள்ள விரும்புவதாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும் ஜனநாயக கட்சியின் ஸ்தாபகருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
தி இந்துவுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் கூறியதாவது,
தான் இவ்விடயத்தில் யாரையும் எதிர்கொண்டு சரியான நிலைமையை முன்வைக்க தயாராக உள்ளதாகவும் இங்கு பிரச்சினை ஏதும் இல்லை எனது மனச்சாட்சி தெளிவாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள்; ஆணையகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக உள்ளீர்களா, எனக் கடந்த சனிக்கிழமை(19) கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
தான் தளபதியாக இருந்த 2005 -2009 காலத்தில் தன்னோடு பணிபுரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டுமென பொன்சேகா கூறியிருந்தார்.
நம்பகமான சாட்சியம் இருப்பின் முறையான விசாரணை நடைபெற்று குற்றம் காணப்படின் குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
நாம் நேர்மையாக இருப்பில், சரியான சட்ட முறைமைகளை செயற்படுத்துவோம் நாம் எதையும் மூடி மறைக்க தேவையில்லை. அதேசமயம் பாலியல் வன்முறை எப்போதாவது இடம்பெற்றவை அல்ல, அவை வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட கொள்கை என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பொன்சேகா நிராகரித்தார்.
இவை மேலதிகாரிகள் தெரிந்திருக்க ஒரு திட்டமிட்ட வகையில் ஒரு போதும் நடைபெறவில்லை. இது எமது எண்ணத்திலோ அல்லது உபாயத்திலோ ஓர் அங்கமாக இருக்கவில்லை என கூறினார்.
இருப்பினும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்ட சகல விடயங்களையும் அவர் ஒட்டு மொத்தமாக மறுக்கவில்லை. அவர் உள்நாட்டு விசாரணை செயன்முறை ஒன்றை விரும்புகின்றார்.
டிசெம்பர் 2000 இல் வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த 8 தமிழர்கள் கொலை தொடர்பில் இலங்கை இராணுவ வீரரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டதை, தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர் காட்டினார்.
சட்ட நுணுக்கங்களில் வெளிநாட்டு நிபுணர் சேவை கூட ஏற்றுக்கொண்ட அவர் வெளிப்பட தன்மையாக எதையும் செய்வது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
3 hours ago