2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆற்றுப்படுத்துமாறு கடிதம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் இலங்கை வதிவிட பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமாரா குணநாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜயசிங்க, ஆனந்த சங்கரி மற்றும் சட்டத்தரணி மனோபார டி சில்வா உள்ளிட்டோரே இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனால் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா.வில் ஆற்றுப்படுத்துமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X