Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர், எதிரணியில் அமவுள்ளதால், நாடாளுமன்றத்தில் மற்றுமொரு நெருக்கடியை சந்திக்கவேண்டிய நிலைமை தேசிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காத 47 எம்.பி.களே நாடாளுமன்றத்தில் குழுவாக இருந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால், நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் நாடாளுமன்றத்தின் நாளைய (22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ) அமர்வு சிக்கல் நிறைந்ததாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சு, இராஜங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அந்த பேச்சுவார்த்தையின் போது, அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளாத தாங்கள், நாடாளுமன்றத்தில் தனித்து குழுவாக இயங்க போவதாக அறிவித்திருந்தனர்.
அதற்கு அனுமதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரக்கூடாது என்று கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு இருப்பதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமக்கே வழங்கவேண்டும் என்று நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது, தான் கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
3 hours ago