Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு, உறவுகள் வழியான ஒத்துழைப்பும் உதவியும் இல்லாதிருந்திருப்பின் கடந்த தசாப்தங்களாக முகங்கொடுத்து வந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது போயிருக்கும் என பாகிஸ்தானுக்கான பதில் உயர்ஸ்தானிகர் விஜயந்தி எதிரிசிங்க கூறினார்.
பைஸல் மஸ்ஜித் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சர்வதேச உறவுகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விஜயந்தி எதிரிசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாகிஸ்தானும் இலங்கையும் அதிசிறப்பான பாதுகாப்பு உறவுகளை கொண்டுள்ளன. அண்மைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், விளையாட்டு, கப்பல்துறை, சுற்றுலாத்துறை, பொருளாதார, அபிவிருத்தி, போதைப்பொருள் தடுப்பு, அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருபக்க உறவுகள் மேலும் வளரும்.
சார்க் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட முதலாவது நாடு இலங்கையாகும். இரு நாடுகளின் வர்த்தகம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் கூறினார்.
இவ்வாறான கருத்தரங்குகள் மாணவர்களுக்கு பெருமளவு அனுபவங்களை வழங்குவதாக இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் அஹமட் யுஸிப் அல் றைவீஷ் தெரிவித்தார்.
முப்பது இலங்கை மாணவர்கள் சர்வசதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் விரைவில் சேரவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பகுதி தலைவர் டாக்டர் அப்ரிடி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago